close
Choose your channels

'குக் வித் கோமாளி' புகழ் சர்ச்சைக்கு காரணம் இந்த பிரபலமா?

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘குக் வித் கோமாளி’என்ற நிகழ்ச்சி வேற லெவலில் பிரபலமாகி உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் குக்’கள் மற்றும் கோமாளிகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கன்ஃப்யூஷன் அறைக்கு கோமாளிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சமையல் செய்ய வேண்டிய பொருட்கள் மற்றும் குறிப்புகள் கூறப்பட்டன. அந்த வகையில் புகழ் கன்ஃப்யூஷன் அறைக்கு சென்றபோது அவரிடம் பேசிய நபர் சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது புகழுடன் பேசிய அந்த நபர் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குரேஷி என்று கூறப்படுகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் கோமாளிகளுடன் குரேஷி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரேஷி பேசியதாக கூறப்படும் அந்த சர்ச்சைக்குரிய காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை என்றாலும் இன்னும் அந்த காட்சி ஹாட்ஸ்டாரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.