close
Choose your channels

'குக் வித் கோமாளி 3' ஆரம்பமே அமர்க்களம்: பரத்தை விரட்டி விரட்டி அடிக்கும் வெங்கடேஷ் பட்

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று முதல் சீசன் 3 ஆரம்பமாக உள்ளது என்பதும் இந்த சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்குகள் மற்றும் கோமாளிகள் தற்போது திரையுலகில் பிரபலமாகி வருவதை அடுத்து இந்த சீசனில் கலந்து கொள்பவர்களுக்கும் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியாகிய புரமோ வீடியோவில் கோமாளியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பரத் அறிமுகமாகிறார். அவரை ’குக் வித் கோமாளி’ குழுவினர் வரவேற்றபோது மணிமேகலை பரத்தியிடம் முடிந்தால் நீ வெங்கடேஷ் பட் சாரை மாமா என்று கூப்பிட்டு பார் என்று சவால் விட, மணிமேகலையின் சவாலை ஏற்றுக் கொண்ட பரத், ‘மாமா’ என்று கூப்பிட இதனை அடுத்து வெங்கடேஷ் பட், பரத்தை விரட்டி விரட்டி அடிக்கும் காட்சிகள் காமெடியாக உள்ளன.

ஏற்கனவே கடந்த சில நாட்களில் வெளியான ‘குக் வித் கோமாளி சீசன் 3 புரமோக்கள் நல்ல பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சீசனிலும் கடந்த சீசனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.