close
Choose your channels

'குக் வித் கோமாளி' 5வது சீசனின் 10 குக்குகள் அறிமுகம்.. நாம் சொன்னது எல்லாமே சரியா இருக்கே..!

Wednesday, April 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பிரமாண்டமாக ஐந்தாவது சீசன் வரும் 27ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் குக்குகள் குறித்த செய்திகள் கசிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் விஜய் டெலிவிஷன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 10 குக்குகளை அறிமுகம் செய்து ப்ரமோ வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் குக்குகளாக பிரபல யூடியூபர் இர்பான், சீரியல் நடிகர் வசந்த் , விஜய் டிவி பிரியங்கா, நடிகர் விடிவி கணேஷ் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்பட பல சீரியல்களில் நடித்த சுஜிதா ஆகியோர் முதல் ஐந்து குக்குகளாக அறிமுகம் செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து மற்றுமொரு புரமோ வீடியோவில் ஷாலினி, அக்சய் கமல், திவ்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் தேவா மற்றும் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பூஜா ஆகியோர் குக்குகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் பத்து ’குக்குகள் தான் கலந்து கொள்வார்கள் என்ற நிலையில் அனைவரையும் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே அறிமுகப்படுத்திவிட்டனர் என்பதும் இதில் சூப்பர் சிங்கர் பூஜா தவிர கிட்டத்தட்ட அனைவரையுமே நாம் ஏற்கனவே குக்குகளாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று சொல்லி இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.