close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகை!

Saturday, April 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட்டான நிலையில் அவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண்தேஜா ஆகியோர்கள் நடிப்பில் 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அல்லுரி சிதாராமாஜு, கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இந்த படத்தில் பிரிட்டன் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்பவர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து டெய்ஸி விலகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை நடிப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் படத்தில் அஜய்தேவ்கன், அலியாபட், நடிகை சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.