close
Choose your channels

ரஜினி மகளாக நடிக்கும் 'கமல்' மகள்?

Saturday, April 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தலைவர் 167' திரைப்படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நிலையில் ரஜினியின் மகளாக நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே 'பாபநாசம்' படத்தில் கமல் மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 'தளபதி' படத்திற்கு பின் ரஜினியுடனும், 'துப்பாக்கி' ,'ஸ்பைடர்' படங்களுக்கு பின் முருகதாசுடன் அவர் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.