close
Choose your channels

டண்டனக்காவை அடுத்து 'டமாலு டுமீலு'. அனிருத்தின் அடுத்த பாடல்

Friday, November 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் இசைப்புயல் அனிருத், இசையமைப்பது மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்கள் கம்போஸ் செய்யும் பாடல்களையும் பாடி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், உள்பட பல இசையமைப்பாளர்களுக்கு அனிருத் பாடல் பாடியுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான 'ரோமியோ ஜூலியட்' படத்திற்காக டி.இமான் இசையமைப்பில் அனிருத் பாடிய 'டண்டனக்கா' பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் டி.இமான் இசையில் 'போகன்' படத்திற்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்.
'டமாலு டுமீலு' என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. டண்டனக்கா பாடல் போலவே இந்த பாடலும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.