close
Choose your channels

விஜய் பாடிய 'பைரவா' பாடல். சந்தோஷ் நாராயணன் தரும் முக்கிய தகவல்

Saturday, November 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரு பாடலை பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் 'பைரவா[' படத்திலும் ஒரு பாடலை பாடலை விஜய் பாடியுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த பாடல் குறித்து முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். விஜய் இந்த படத்தின் பாடலை நம்ப முடியாத வகையில் மிகவும் அபாரமாக பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பூமியே அதிரும் வகையிலான டான்ஸ் உறுதி' என்று பதிவு செய்துள்ளார்.
சந்தோஷ் நாராயணனின் இந்த பதிவை அடுத்து இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.