close
Choose your channels

'தர்பார்' செகண்ட்லுக்: தரமான சம்பவம் செய்த முருகதாஸ் டீம்!

Wednesday, September 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் லுக் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் லைகாவின் சமூக வலைத்தளப்பக்கத்தில் அந்த தரமான சம்பவம் வெளியானது. இளமைத்தோற்றத்தில் வெறும் பனியனுடன் ஆக்ரோஷமான பார்வையில் ஒரு ஆக்சன் காட்சியின் வடிவில் உள்ள இந்த செகண்ட்லுக் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவதும் இந்த செகண்ட்லுக்கில் உறுதி செய்யப்பட்டுள்ளது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.