close
Choose your channels

'தேவ்' சென்சார் தகவல் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

Monday, January 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவலை கார்த்தியும் தனது சமூக வலைத்தள பகக்த்தில் பதிவு செய்துள்ளார்.

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.