close
Choose your channels

தூத்துகுடி தொகுதியில் பிரபல நடிகை போட்டியா?

Monday, January 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துகுடி தொகுதி கடந்த சில நாட்களாகவே ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் இந்த தொகுதியில் திமுகவின் பெண் பிரபலம் ஒருவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமார் மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி அருகில் உள்ள திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராதிகா திரைப்படத்தில் மட்டுமின்றி சீரியலிலும் பிரபலமாக இருப்பதால் பெண்கள் ஓட்டு அவருக்கு அதிகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.