close
Choose your channels

தனுஷூக்கு ஜோடியாகும் மணிரத்னம் பட நாயகி!

Wednesday, February 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’பட்டாஸ்’ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’சுருளி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது தனுஷ் ’கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்றும் இந்தப் படம் தனுஷின் 44 வது படம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ’ஓகே கண்மணி’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. முதல்முறையாக தனுஷ், நித்யா மேனன் ஜோடியாக இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.