close
Choose your channels

இந்தியில் ரீமேக் ஆகும் தல அஜித்தின் சூப்பர்ஹிட் படம்

Wednesday, February 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகி வருவதை பார்த்து வருகிறோம். ராகவா லாரன்ஸின் ’காஞ்சனா’ முதல் கார்த்தியின் ‘கைதி’ வரை பல தமிழ் திரைப்படங்கள் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது தல அஜித் சூப்பர் ஹிட் படம் ஒன்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஏஎம் ரத்னம் தயாரித்த ’வேதாளம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜான் ஆபிரகாம், அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவிருப்பதாகவும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது இந்த படத்தை புஷன்குமார் என்பவர் தயாரித்துள்ளார்.

ஜான் ஆபிரகாம் மற்றும் புஷன்குமார் ஆகிய இருவரும் இந்த படத்தின் ரீமேக்கை தயாரிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தின் நாயகி உட்பட மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.