close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? 6 நாட்களில் வசூலை குவிக்க வாய்ப்பு..!

Wednesday, December 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ’கேப்டன் மில்லர்’படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் சரியான ரிலீஸ் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் படக்குழுவினர்களிடமிருந்து கசிந்த தகவலின் படி ஜனவரி 11ஆம் தேதி ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. ஜனவரி 11 வியாழக்கிழமை என்பதால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு தினங்கள் மற்றும் பொங்கல் விடுமுறை தினங்களான திங்கள், செவ்வாய் என மொத்தம் ஆறு நாட்களில் வசூலை அள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’கேப்டன் மில்லர்’ படம் பாசிட்டிவ் விமர்சனம் பெற்றால் நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தனுஷ் புரமோஷன் களத்தில் விரைவில் இறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன், ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.