close
Choose your channels

'கர்ணன்' படத்தின் சென்சார் சான்றிதழ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸுக்கு தேவையான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது என்பதும் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ/ஏ’ சான்றிதழ் கொடுத்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தனுஷ், ரஜிஷா விஜயன், லால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அனைத்து பாடல்களும் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது என்பதும், இந்த படத்தின் டீஸர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.