close
Choose your channels

'வாழ்க்கையில நேர்மையா இருக்குறதை விட சாமர்த்தியமா இருக்குறது முக்கியம்: 'மாறன்' டிரைலர்

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவருமே பத்திரிகையாளர்கள் கேரக்டரில் நடித்திருக்கும் இந்த டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அரசியல்வாதிகளின் சூழ்ச்சி காட்சிகள், காவல்துறையினரின் பரபரப்பு காட்சிகள் மற்றும் தனுஷ் மாளவிகா மோகனன் ரொமான்ஸ் மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள்:

  • ’நாம எழுதுவது மக்களுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கணும் என்பது முக்கியமல்ல, மக்களுக்கு உண்மையை கொண்டு போய் சேருகிற மாதிரி இருக்கனும்
  • நம்ம எழுதுறது உண்மை, இதில் யோசிக்க எதுவும் இல்லை

  • வாழ்க்கையில நேர்மை இருக்கிறது முக்கியம். ஆனா அதைவிட முக்கியம் சாமர்த்தியமாக ’
  • இந்தப் டிரைலரை பார்க்கும்போது நிச்சயம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் மார்ச் 11ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.