close
Choose your channels

நமீதா குழந்தைகளின் முதல் பிறந்தநாள்.. க்யூட் புகைப்படம் வைரல்..!

Monday, July 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நமீதா தனது இரட்டை குழந்தைகளின் பிறந்த நாளை கேரளாவில் உள்ள கோவிலில் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக கடந்த 2000 ஆண்டுகளில் இருந்தவர் நமீதா என்பதும் விஜய் அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நமீதா திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்த குழந்தைகளுக்கு அவர் கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்ற பெயர்களை வைத்திருந்தார் என்பதும் இந்த குழந்தைகளின் புகைப்படத்தை அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நமீதா குழந்தைகளின் முதலாவது பிறந்த நாளை அவர் கேரளாவில் உள்ள கோவிலில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

எங்கள் வாழ்வு ஒளிமயமாகவும் பிரகாசமாகவும் இருப்பதற்கு இந்த குழந்தைகள் தான் காரணம். இந்த குழந்தைகளுக்கு இன்று முதலாவது பிறந்தநாள். என்னுடைய கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் ஆகிய இருவரும் ஒரு வயதை பூர்த்தி செய்துள்ளனர். நீங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் மந்திரங்களையும் அற்புதங்களையும் செய்து உள்ளீர்கள். என் இதயம் மற்றும் இதயத் துடிப்புக்கு இந்த குழந்தைகளை காரணம், லவ் யூ கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்று பதிவு செய்துள்ளார். நமிதாவின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.