close
Choose your channels

தனுஷ் நடித்த 'வாத்தி' பாடல் ரிலீஸ்: ரசிகர்கள் குஷி!

Thursday, November 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘வாத்தி’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உறுதி செய்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை ஸ்வேதா மேனன் பாடி உள்ளார். இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில் சாய் குமார் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.