close
Choose your channels

தனுஷ் வேற லெவல் நடிகர்: 41 வயது சீனியர் நடிகை பாராட்டு!

Wednesday, August 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் என்பது தெரிந்ததே. அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்கும் என்பதும் அவர் தனது கேரக்டரில் ஒன்றி விடுவார் என்பதால் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷின் நடிப்பு குறித்து தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் பாராட்டியுள்ளனர்.

மேலும் ’தி க்ரேமேன்’ என்ற திரைப்படத்தில் நடித்த பின்னர் இந்த படத்தின் இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் உள்பட பல ஹாலிவுட் திரையுலகினர் தனுஷின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் திரையுலகில் சீனியர் நடிகைகளில் ஒருவரான 41 வயது கரீனா கபூர் தனுஷ் நடிப்பை போற்றி புகழ்ந்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷ் குறித்து கூறிய போது ’தனுஷ் மிகவும் அற்புதமான நடிகர் என்றும் ஒவ்வொரு முறையும் அவரை எந்த வேடத்தில் பார்த்தாலும் அவருடைய நடிப்பு வேற லெவல் என்றும் தெரிவித்துள்ளார். கரீனா கபூரின் இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.