close
Choose your channels

'பாகுபலி 2' சுனாமியிலும் அசராத 'பவர் பாண்டி'யின் வசூல்

Tuesday, May 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வெள்ளியன்று 'பாகுபலி 2' திரைப்படம் இந்தியா முழுவதும் போட்டியே இல்லாமல் சோலோவாக ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள 90% திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது. அதேபோல் வசூலில் இந்த படம் மற்ற இந்திய படங்களின் சாதனையை புரட்டி போட்டுவிட்டது.

இந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தின் சுனாமியிலும் தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' படத்தின் வசூல் கடந்த வாரம் சிறப்பாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக சென்னையில் கடந்த வார இறுதியில் 'பவர்பாண்டி' திரைப்படம் 8 திரையரங்குகளில் 41 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ. 5,53,840 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 30 வரை ரூ.1,81,97,690 வசூல் செய்துள்ளது. பெரிய ஹீரோக்கள் இல்லாத இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ.2 கோடி வசூலை நெருங்கியது தனுஷின் இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.