close
Choose your channels

ரெஸ்டாரெண்டில் லஞ்ச் சாப்பிடும் தனுஷ்: உடனிருக்கும் இளம்பெண் யார்?

Thursday, February 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம்பெண் ஒருவருடன் தனுஷ் ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் தற்போது ஹைதராபாத்தில் ’வாத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே தனுஷ் ஐதராபாத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவருடன் இருக்கும் இளம் பெண் அவரது காஸ்ட்யூம் டிசைனர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் லஞ்ச் சாப்பிட்டு ஒரு சில மணி நேரங்கள் அந்த ரெஸ்டாரண்டில் இருந்ததாகவும் அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் நடித்துள்ள ’மாறன் திரைப்படம் மற்றும் ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் ஆகியவை விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் அவர் ’திருச்சிற்றம்பலம்’ ’நானே வருவேன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.