close
Choose your channels

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் திரைப்படம்.. தனுஷின் முக்கிய அறிவிப்பு..!

Tuesday, March 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தை பாலிவுட் முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் இந்த படத்தை ’கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து அறிவிப்பு வரும் 20ஆம் தேதி 12:30 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார் ஒரு வயலின் புகைப்படத்தை பதிவு செய்து ஒரு காவிய பயணம் தொடங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்புக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

வரும் 20ஆம் தேதி இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.