close
Choose your channels

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' ரிலீஸ் குறித்த தகவல்

Saturday, January 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் ஹீரோவாக புரமோஷன் பெற்று ஒருசில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானம் ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும், கடந்த 2018ஆம் ஆண்டில் அவர் நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராகவுள்ள 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் ஜனவரியில் வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

முதல் பாகம் போலவே இந்த படமும் பேய்க்கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம், ஷிரிதா ஷிவதாஸ், மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்பாலா இயக்கத்தில் ஷபீர் இசையில் தீபக்குமார் ஒளிப்பதிவில் மாதவன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சந்தானம் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.