close
Choose your channels

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி குறித்து கவுதம் மேனன் தகவல்!

Saturday, August 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் எப்போது வெளிவரும் என விக்ரம் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நீண்ட காலதாமத திரைப்படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து வரும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் விரைவில் 'துருவ நட்சத்திரம்' படமும் இதேபோல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் கவுதம் மேனன், 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 6ஆம் தேதி 'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார். இதனையடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விக்ரம், சிம்ரன், பார்த்திபன், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, வம்சி கிருஷ்ணா, உள்பட பலர் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.