துரோகிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம்: தினகரன்

  • IndiaGlitz, [Friday,December 08 2017]

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரனுக்கு நேற்று தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்கியது. இந்த சின்னத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கிய தினகரன், 'துரோகிகளுக்கு பிரஷர் ஏற்றவே ‘பிரஷர் குக்கர்’ சின்னத்தை தேர்வு செய்தோம்' என்று கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: ’வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஆயிரத்தெட்டு தொல்லைகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், அதைப் படிக்கற்களாக்கி எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னத்தைத் தேர்வு செய்தேன். தேர்தல் பணிகளை அடுத்த பத்தாவது நிமிடத்தில் தொடங்கிவிடுவேன்’ என்று கூறினார். அவர் கூறியபடியே கையில் குக்கரை ஏந்தியபடி நேற்றிரவே தினகரன் ஆர்.கே.நகரில் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து கூறியபோது, 'எங்களுக்கு எந்த பிரஷரும் இல்லை, இருக்கின்ற பிரஷரில் வெடிக்கப்போவது யாரென்று இன்னும் இரண்டு  வாரத்தில் தெரியும்  என்று கூறினார்.

More News

சூப்பர் ஹிட் வெற்றிப்படத்தின் ரீமேக்கில் நயன்தாரா

கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'யூடர்ன்' திரைப்படம் குறித்து அனைவரும் அறிந்ததே. லூசியா படத்தின் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த  இயக்குநர் பவன்குமார்

தளபதியுடன் ஓகே, தல படத்தில் நடிக்க சான்ஸ் கொடுங்கள்: பிரபல நடிகர் வேண்டுகோள்

தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு

என் வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை: விபத்து குறித்து கவுதம் மேனன்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் நேற்று விபத்து ஒன்றில் சிக்கி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த செய்தியை பார்த்தோம். ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பிய இயக்குனர் கவுதம்மேனன், தான் விரைவில்

அப்புசாமி-சீதாப்பாட்டி புகழ் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் என்னும் பிரபல தமிழ் எழுத்தாளர் நேற்றிரவு காலமானார். இவரது இறுதி சடங்கு இன்று (8-12-17) பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சுசீந்திரன் -மிஷ்கின் பட டைட்டில் அறிவிப்பு

பிரபல இயக்குனர் சுசீந்திரன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர் குறித்த விபரங்கள் இன்று மாலை வெளியாகும் என்று வெளிவந்த அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம்.