close
Choose your channels

தளபதியுடன் ஓகே, தல படத்தில் நடிக்க சான்ஸ் கொடுங்கள்: பிரபல நடிகர் வேண்டுகோள்

Friday, December 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'தளபதி 62' படத்தில் முக்கிய கேரக்டருடன் கூடிய காமெடி ரோலில் யோகிபாபு நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் விஜய்யுடன் படம் முழுவதும் வலம் கேரக்டர் யோகிபாபுவுக்கு கிடைத்துள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை பார்த்தோம்

இந்த நிலையில் நடிகர் யோகிபாபு, தற்போது தனது சமூக வலைத்தளத்தில் தல அஜித்தின் 'விசுவாசம்' படத்திலும் நடிக்க இயக்குனர் சிவாவிடம் வாய்ப்பு கேட்டு டுவீட் செய்துள்ளார். விஜய் சார் நடிக்கும் 'விஜய் 62' படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் அஜித் சார் நடிக்கும் 'விசுவாசம்' படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு மகிழ்ச்சி இல்லை, எனக்கு வாய்ப்பு கொடுங்கள் சிவா சார்' என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

யோகிபாபுவின் டுவீட்டை பார்த்து இயக்குனர் சிவா அவருக்கு வாய்ப்பு கொடுப்பாரா? தல, தளபதியுடன் ஒரே நேரத்தில் நடிக்கும் அதிர்ஷ்டத்தை யோகிபாபு பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.