close
Choose your channels

டி20 உலகக்கோப்பை ஃபைனலில் மோதவுள்ள அணிகள்? பரபரப்பை கிளப்பும் புது கணிப்பு!

Thursday, August 19, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். அவ்வபோது இவர்கூறும் சில கணிப்புகள் இந்திய அணிக்கு கணக்கச்சிதமாகப் பொருந்தி போகும். அந்த வகையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா இடம்பெறும் என்று அடித்துக் கூறியுள்ளார். தினேஷ் கார்த்திக் கூறிய இந்த கணிப்பு தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது 2021 இல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கி நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் தகுதிச்சுற்றுப் போட்டிகள் அனைத்தும் ஓமனில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

தகுதிச்சுற்றுப் போட்டியில் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். முதல் தகுதிச்சுற்றில் ஆடும் அணிகள் வெற்றிப்பெற்று முக்கியச் சுற்றுப் போட்டிகளில் இணைந்து விளையாட உள்ளனர்.

தகுதிச்சுற்றைத் தவிர “குரூப்  ஏ“, “குரூப் பி“ எனப் பிரிக்கப்பட்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா “பி“ அணியில் இடம் பெற்றிருக்கிறது. இதனால் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. அடுத்து நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளே தகுதிப்பெறும் என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள ஒருசில அணிகளைத் தவிர பெரும்பாலான அணிகள் நல்ல ஃபாமில் இருக்கின்றன. மேலும் இந்தியா தொடர்ந்து நல்ல தரத்துடன் விளையாடி வருகிறது. அதேபோல இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் பலமான நிலையில் இருக்கிறது. அதிலும் கேப்டன் மோர்கன் திறமையாக செயல்படுகிறார்.

இதனால் டி20 உலகக்கோப்பை போட்டியைப் பொறுத்தவரையில் இந்தியா இறுதிப்போட்டியில் உறுதியாக இடம்பெறும். நம்முடைய இந்திய வீரர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை எதிர்த்து விளையாடுவார்கள் என்று தெரிவித்து உள்ளார். தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.