close
Choose your channels

'காமத்தை விட கடமை முக்கியம்': 'நாயே பேயே' டிரைலர்

Tuesday, February 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடித்த ‘ஒரு குப்பை கதை’ கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படம் ‘நாயே பேயே’. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

நாய்களை திருடி அதன் ஓனர்களிடம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தினேஷ் கூட்டம், ஒரு பெண்ணை கடத்தி வாழ்க்கையில் செட்டில் ஆக முடிவு செய்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்த பெண்ணின் பிணத்தை கடத்தும் தினேஷ் கும்பல், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திப்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தின் டிரைலரில் இருந்து காமெடி, கவர்ச்சிக்கு பஞ்சமில்லை என தெரிகிறது. தினேஷின் இரண்டாவது முயற்சியும் வெற்றி பெறும் என்றே தெரிகிறது. 'காமத்தை விட கடமை தான் முக்கியம், கல்யாணம் பண்ணி பொண்டாட்டி பேய்யா மாறுவது விட ஒரு பேயையே கல்யாணம் பண்ணிகிட்டா’ போன்ற வசனங்கள் நிச்சயம் வரவேற்பை பெறும்.

சக்திவாசன் இயக்கத்தில் ரகுநாதன் இசையில் நிரன் சந்தர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை எடிட்டர் கோபிகிருஷ்ணா தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.