close
Choose your channels

ரஜினி, அஜித், விஜய் நடிக்க வேண்டிய படங்கள், மிஸ் ஆகிருச்சு: இயக்குனர் ப்ரவீன் காந்தி பேட்டி

Tuesday, August 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினி, அஜித், விஜய் படங்களை இயக்க தனது வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாகவும் இயக்குனர் பிரவீன் காந்தி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் நாகார்ஜுனா, சுஷ்மிதா சென் நடித்த பிரம்மாண்டமான திரைப்படம் ’ரட்சகன்’. இந்த படம் ரஜினி நடிக்க வேண்டிய படம் என்று அவரே தன்னிடம் கூறியதாக பிரவீன்காந்தி கூறியிருந்தார். ஒருவேளை ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்திருந்தால் திரைக்கதையை நான் வேறு மாதிரியாக அவருக்கு ஏற்ற மாதிரி மாற்றி இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அஜித் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்க இருக்கும் படம் ஒன்று உருவாக இருந்ததாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படத்தை இயக்க முடியவில்லை என்றும் கூறினார். அதேபோல் நான் கூறிய இரண்டு கதைகள் விஜய்க்கு மிகவும் பிடித்ததாகவும் விஜய் ஓகே சொல்லியும் அந்த படத்தை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாகவும் இயக்குனர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். அவருடைய முழு பேட்டியின் வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.