close
Choose your channels

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர்!

Monday, April 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக திரையுலகினர் பலர் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி, தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்ற தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கவிஞர் எழுத்தாள,ர் பாடலாசிரியர், பெண்ணுரிமையாள,ர் பழகுவதற்கு எளிமையான மனுசி தென்சென்னை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெருமைமிகு தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

தென்சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்தனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜனும், அம்முக சார்ப்பில் இசக்கி சுப்பையாவும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.