close
Choose your channels

சுசீந்திரனின் அடுத்த படத்தில் உதயநிதி?

Tuesday, December 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருகல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் அதன்பின்னர் 'நண்பேண்டா', இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அவர் 'ஜாலி எல்.எல்.பி' என்ற படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். 'என்றென்றும் புன்னகை' ஏ.கே.அஹ்மது இந்த படத்தை இயக்குகிறார்

இந்நிலையில் 'வெண்ணிலா கபடக்குழு', அழகர்சாமியின் குதிரை', பாண்டியநாடு உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் உதயநிதியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது உதயநிதி படத்தை அவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.