close
Choose your channels

தமன்னாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Monday, December 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக விளங்கி வரும் நடிகை தமன்னா இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு சக நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தமன்னாவுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

மும்பையை சேர்ந்த தமன்னா ஏ.எம்.ரத்னம் மகன் இயக்கிய 'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு முதன்முதலில் கைகொடுத்த படம் பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி'. ஒரு அமைதியான கல்லூரி மாணவியாக இந்த படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இதன்பின்னர் தமன்னாவை உச்சத்தில் ஏற்றிய படம் என்றால் அது கே.வி.ஆனந்த் இயக்கிய 'அயன்' படம்தான். சூர்யாவுடன் இணைந்து நடித்த தமன்னா, இந்த படத்திற்கு பின்னர் முன்னணி நாயகிகளில் பட்டியலில் இடம்பெற்றார். இதன் பின்னர் ஆனந்த தாண்டவம், கண்டேன் காதல், பையா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.

விஜய்யுடன் சுறா படத்திலும் அஜீத்துடன் 'வீரம்' படத்திலும் நடித்த தமன்னாவுக்கு உலகப்புகழ் தேடித்தந்த படம் சமீபத்தில் வெளியான 'பாகுபலி'. இந்த படத்தில் காதல், வீரம் என நடிப்பில் ஒரு புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது பாகுபலி 2' உள்பட ஒருசில படங்களில் நடித்து வரும் தமன்னா மேலும் பல வெற்றிகளை குவிக்க இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.