close
Choose your channels

'வலிமை' வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏ!

Friday, February 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் முதல் நாள் வசூலில் இந்த படம் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படத்தின் வெற்றிக்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் திமுக எம்எல்ஏ ஒருவரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனின் சகோதரரும், திநகர் எம்.எல்.ஏவுமான ஜெ கருணாநிதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘வலிமை’ குறித்து கூறியிருப்பதாவது:

தமிழ் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் கடின உழைப்பில் வெளியாகும் 'வலிமை’ திரைப்படம் வெற்றி பெற்று, சாதனைகள் பல படைத்து, சிறந்த திரைப்பட வரிசையில் வலியதோர் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.