close
Choose your channels

தீக்குளிச்சா செத்துருவ, டீ குடிச்சிட்டு வேலையை பாரு: துரைமுருகன்

Tuesday, April 2, 2019 • தமிழ் Comments

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை செய்ய வந்தபோதே, 'நீங்கள் சோதனை செய்யுங்கள், நான் குளிச்சிட்டு வந்துடறேன்' என்று கூலாக கூறியதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் துரைமுருகன் தேர்தல் பணிகளை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த் நிலையில் வருமான வரித்துறையினர்களின் சோதனையால் வெகுண்டெழுந்த திமுக தொண்டர்களில் ஒருவர், 'தலைவா ஆணையிடுங்கள் உங்களுக்காக திக்குளிக்கின்றேன்' என்று சொல்ல, உடனே துரைமுருகன், 'தீக்குளிச்சா செத்துருவ, போய் டீ குடிச்சிட்டு தேர்தல் வேலையை பார்' என்று கூலாக கூறினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz