நிஜ வாழ்க்கையிலும் ஆக்சன் ஹீரோவான நடிகர்: கேட்டை உடைத்து தள்ளியதால் பரபரப்பு
பிரபல ஹாலிவுட் ஆக்சன் நடிகரும், WWE விளையாட்டு வீரருமான ராக் என்ற டிவைன் ஜான்சன் சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றுக்காக வீட்டை விட்டு கிளம்ப தயாராக இருந்தார். அவரது வீட்டின் கேட் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் வேலை செய்யும் என்பதால் மின்சாரம் இருந்தால் மட்டுமே அந்த கதவை திறக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவர் படப்பிடிப்புக்கு கிளம்பிய நேரத்தில் புயல் காரணமாக மின்சாரம் தடைபட்டு இருந்தது. மின்சாரம் வருவதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாகும் என்று அவருக்கு தகவல் வந்ததை அடுத்து படக்குழுவினர்களை 45 நிமிடங்கள் காத்திருக்க வைக்க விரும்பாத ராக், ஹைட்ராலிக் சிஸ்டத்தில் உள்ள கேட்டை தனது கைகளாலேயே உடைத்து விட்டு அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஒரு சில மணி நேரத்தில் அவரது பாதுகாப்பு குழுவினர் தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்து அந்த கேட்டை சரி செய்து உள்ளனர்.
திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்த நடிகர் ராக், நிஜத்திலும் ஹீரோவாக மாறி உள்ளது குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.