close
Choose your channels

கமல் படத்தில் மாஸ் கேரக்டர்.. ரஜினி படத்தில் காமெடியன்.. பகத் பாசில் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..!

Wednesday, April 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு மாஸ் கேரக்டரில் நடித்த நடிகர் பகத் பாசில், ரஜினி நடித்து வரும் ’வேட்டையன்’ திரைப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படத்தில் அமர் என்ற மாஸ் கேரக்டரில் பகத் பாசில் நடித்திருந்தார் என்பதும் கிட்டத்தட்ட முதல் பாதியில் அவருடைய காட்சிகள் அதிகமாக இருக்கும் என்பதும் முதல் பாதியின் நாயகனே பகத் பாசில் என்று கூறப்படும் அளவுக்கு மாஸ்க் கேரக்டரில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பகத் பாசில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திலும் அவர் ஒரு மாஸ் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் தான் ஒரு காமெடி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ரஜினியுடன் சேர்ந்து காமெடி செய்திருப்பதாகவும் அவை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வில்லன், மாஸ் நாயகன் உள்பட பலவிதமான கேரக்டரில் பார்த்த பகத் பாசில் காமெடி கேரக்டரில் எப்படி கலக்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.