close
Choose your channels

மெர்சல்-பிகில் படங்களுக்கு இடையிலான ஒரு முக்கிய வித்தியாசம்!

Wednesday, July 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படத்தில் அப்பா விஜய்யான தளபதி கேரக்டர் பிளாஷ்பேக்கில் மட்டுமே வரும். எனவே அப்பாவிஜய் மற்றும் மகன் விஜய் சந்திக்கும் காட்சி அந்த படத்தில் இல்லை. அதேபோல் 'பிகில்' படத்திலும் விஜய், அப்பா-மகன் என இரண்டு கேரக்டர்களிலும் நடித்து வருவதால் இந்த படத்திலும் அப்பா விஜய் கேரக்டர் பிளாஷ்பேக்கில் மட்டும் இருக்கும் என கருதப்பட்டது.

ஆனால் தற்போது கசிந்துள்ள தகவலின்படி அப்பா, மகன் என இரண்டு விஜய் கேரக்டர்களும் ஒரே காலகட்டத்தில் இருப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். அப்பா விஜய் கேரக்டரான 'பிகில்' கேரக்டர் பிளாஷ்பேக்கில் வரும் கேரக்டர் இல்லை என்றும் படம் முழுவதும் வரும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் முதலில் அப்பா கேரக்டருக்கு சத்யராஜை நடிக்க வைக்க அட்லி திட்டமிட்டாராம். ஆனால் தற்செயலாக விஜய்க்கே அந்த கெட்டப்பை போட்டு பார்த்தபோது இயக்குனர் உள்பட படக்குழுவினர் முழு திருப்தி அடைந்ததால் விஜய்யையே நடிக்க வைக்க அட்லி முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.