close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு முன்பே சோழர் வேடத்தில் விக்ரம்: ஒரு அபூர்வ ஒற்றுமை

Friday, January 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து விரைவில் இந்த படப்பிடிப்பில் விக்ரம் உள்பட வேறு சில நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விக்ரம் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சோழர் வேடத்தில் விக்ரம் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ள தகவல் தெரியவந்துள்ளது. ஒரு முன்னணி டீ நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் சோழர் வேடத்தில் விக்ரம் நடித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சோழர் வேடத்தில் விளம்பரப் படத்தில் நடித்த விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற சோழர் வேடத்தில் நடிப்பது ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது அதுமட்டுமின்றி விக்ரம் சோழராக நடித்த விளம்பர படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார் என்பதும், தற்போதைய பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும் இன்னொரு அபூர்வ ஒற்றுமை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.