close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் ஃப்ரீஸ் டாஸ்க்: யார் யாருக்கு எந்த பாடல்?

Monday, December 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் உறவினர்கள் போட்டியாளர்களை சந்திக்கும் நிகழ்வுகள் இடம்பெறும் என்பதும் உறவினர்கள் வீட்டின் உள்ளே வரும்போது சம்பந்தப்பட்ட போட்டியாளர் ப்ரீஸ் ஆக நிற்க வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்படும் என்பதும் இந்த நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு வாரம் முழுவதும் இடம்பெறும் இந்த டாஸ்க் செண்டிமெண்ட்டின் உச்சகட்டமாக இருக்கும்

இந்த நிலையில் இந்த சீசனில் நாளை முதல் ஃப்ரீஸ் டாஸ்க் எனப்படும் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வரும்போது அந்த போட்டியாளருக்கு பொருத்தமான ஒரு பாடலை நிகழ்ச்சியின்போது ஒளிபரப்புவதும் வழக்கமான ஒன்றே

அந்த வகையில் இந்த சீசனில் எந்தெந்த போட்டியாளருக்கு என்னென்ன பாடல் பொருத்தமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் தங்கள் கற்பனை குதிரைகளை அவிழ்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருப்பது பெரும் நகைச்சுவையின் உச்சகட்டமாக உள்ளது. எந்தெந்த போட்டியாளருக்கு எந்த பாடல் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் பாடலை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.