close
Choose your channels

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் விவகாரம்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கெளதம் மேனன்..!

Friday, November 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை கூட தயாரிப்பு தரப்பிலிருந்து இன்று படம் உறுதியாக வெளியாகும் என்றும் முன்பதிவுகள் சில மணி நேரத்தில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சற்று முன்னர் இயக்குனர் கௌதம் மேனன் தனது சமூக வலைத்தளத்தில் எதிர்பாராத காரணத்தினால் ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை இன்று வெளியிட முடியவில்லை என்றும் ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

மன்னிக்க வேண்டும். ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் இன்று படத்தை திரையிட முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது. உலகெங்கும் முறையான முன்பதிவுகள் மற்றும் சரியான திட்டமிடல் மூலம் உங்கள் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தர விரும்புகிறோம்.

இந்த திரைப்படத்திற்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அது எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார். ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று வெளியாகாததால் விக்ரம் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.