close
Choose your channels

வாயை மூடு, போடி: ஓவியாவுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் மோடி சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்திருந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பலர் #GoBackToModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகை ஓவியாவும் தனது டுவிட்டரில் #GoBackToModi என்று பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஓவியா மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுன் விரைவில் இது குறித்த விசாரணை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓவியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’வாயை மூடு... போடி’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து கூறியதாவது: ’வாயை மூடு... போடி’ ரைமிங்கா இருக்குதா என்று சொல்லி பார்த்தேன். உன்னை அவமதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பிக்பாஸ் சீசனை நான் நினைத்து பார்க்கின்றேன். நான் எப்போதும் உனக்கு எதிரானவள்தான். நான் சரியானதை தேர்வு செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ள காயத்ரி, இது திமுகவின் திசை திருப்பும் முயற்சி என்றும், நான் திமுகவை விமர்சித்து வருவதால் ஓவியாவை இது போல் செய்ய திமுக தூண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.