close
Choose your channels

ஒரே ஒரு கேள்வி: அஜித், விஜய் ரசிகர்களின் மோதலுக்கு காரணமான 'மாஸ்டர்' நடிகை!

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் கேட்ட கேள்வி ஒன்றால் அஜித் விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

‘மாஸ்டர்’ படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தவர் நடிகை சுரேகா வாணி. இவர் நடித்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் சமீபத்தில் வெளியான டெலிட்டட் காட்சியில் அவர் நடித்த காட்சி ஒளிபரப்பானது. இந்த நிலையில் நடிகை சுரேகா வாணி தனது டுவிட்டரில் ’தளபதி விஜய்யின் சிறந்த ஆக்ஷன் படங்களை எனக்கு பரிந்துரை செய்யுங்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்

இந்த கேள்விக்கு அஜித், விஜய் ரசிகர்கள் பதிவு செய்த கமெண்ட்ஸ்களால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் சிறந்த ஆக்சன் படங்கள் என சுறா, புலி, பைரவா என்று அஜித் ரசிகர்கள் குறிப்பிட, அதற்கு விஜய் ரசிகர்கள் ’ஆஞ்சநேயா’ ’அசல்’ போன்ற படங்களை பாருங்கள், அதுதான் சிறந்த ஆக்சன் படங்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அஜித் விஜய் ரசிகர்களிடையே கிட்டத்தட்ட ஒரு போரே ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் நடுநிலை ரசிகர் ஒருவர், ‘உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?? தேவை இல்லாம ஃபேன்ஸ் வார் கிரியேட் பண்றதுக்கு இத கேக்க வேண்டியது.. ஏன் நீங்கல்லாம் வேற்று கிரகத்தவரா? ஒண்ணுமே தெரியாத உங்களுக்கு...?? என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.