close
Choose your channels

ஜிபி முத்து பிக்பாஸ் செல்கிறாரா? அவரே அளித்த விளக்கம்

Friday, September 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அவரே இதற்கு விளக்கம் அளித்து கூறியதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மையானது அல்ல. என்னால் போன் இல்லாமல் இருக்க முடியாது. எனக்கு குடும்பம் இருக்கிறது, என்னால் குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியாது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் செல்ல மாட்டேன்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு எதுவும் எனக்கு வரவில்லை என்றும் சென்னைக்கு வந்திருந்தபோது பிக்பாஸ் செட் முன் எடுத்த புகைப்படத்தை வைத்தே இந்த வதந்தி தோன்றியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன் என்றும் கமல்ஹாசன் அவர்களை பார்க்க வேண்டும் என்பது தனது வாழ்நாள் கனவு என்றும் அவரைப் பார்த்து பேசவேண்டும் என்பது தனது நீண்டநாள் விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருக்கும் அளவுக்கு தனக்கு பொறுமை இல்லை என்றும் என்றும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பேன், அந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் உள்ளே 100 நாட்கள் இருக்கும் அளவுக்கு மனப்பக்குவம் என்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜி பி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.