close
Choose your channels

இருமுகனில் ஒருமுகமாகும் கருணாகரன்

Wednesday, March 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உளவுப்பிரிவு அதிகாரி மற்றும் திருநங்கை என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நாசர், தம்பிராமையா ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர் கருணாகரன் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் விக்ரமின் நண்பராக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் கருணாகரன் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருணாகரன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் Glad to work with Chiyan Vikram sir soon with Irumugan Team' என்று பதிவு செய்துள்ளார்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தை புலி' தயாரிப்பாளர்களில் ஒருவராகிய ஷிபுதமீன்ஸ் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.