திருமண வீடியோவில் ஹன்சிகாவின் அழுகைக்கு காரணம் யார்? முன்னாள் காதலரா?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ஹன்சிகாவின் திருமணம் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ 'லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இது குறித்த ட்ரெய்லர்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. கலகலப்பான நடனம், ஆட்டம் பாட்டம் என்று இருக்கும் இந்த ட்ரைலரில் சில உணர்ச்சிவசமான காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹன்சிகா இந்த வீடியோவில் ‘யாருடைய கடந்த காலம் குறித்தும் யாரும் தவறாக பேச வேண்டாம்’ என கண்கலங்கி கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறியதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? என்ற கேள்வி எழுகிறது.
சோஹைல் கதுரியாவின் முன்னாள் மனைவி ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பதும், அவருடைய திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தோழியின் முன்னாள் கணவரை ஹன்சிகா திருமணம் செய்து கொள்வது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவாகி வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஹன்சிகா இந்த வீடியோவில் இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் ஹன்சிகா பிரபல தமிழ் நடிகர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவருடைய நினைவாக கண்கலங்கினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் எதனால் கண்கலங்கினார் என்பது முழு வீடியோவை பார்த்தால் மட்டுமே தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments