close
Choose your channels

இன்று நயன் தாராவுக்கு ஸ்பெஷல் பிறந்த நாள். எப்படி தெரியுமா?

Friday, November 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு மாஸ் நடிகரின் பிறந்த நாளில் அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து அசத்துவார்கள். கிட்டத்தட்ட அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாளும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட திரையுலகின் அனைத்து முக்கிய ஸ்டார்களும் நயன்தாராவுக்கு பிறந்த நாள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மிஞ்சூர் கோபி இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'அறம்' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டதோடு, யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் அடுத்த படமான 'கொலையுதிர்க்காலம்' என்ற படத்தின் அறிவிப்பும் வெளியானது.
இதேபோல் நயன்தாராவின் வாழ்க்கையில் நெருக்கமான விக்னேஷ் சிவனும் இன்று முதல் தான் இயக்கும் அடுத்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். மேலும் இன்று நயன்தாரா, சிவகார்த்திகேயன் - மோகன்ராஜா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இத்தனை நல்ல விஷயங்களும் ஒரே நாளில் நடந்துள்ளதால் கண்டிப்பாக இந்த பிறந்தநாள் நயன்தாராவுக்கு ஸ்பெஷல் பிறந்த நாள் என்று கூறுவது மிகப்பொருத்தமாகவே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.