close
Choose your channels

பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகிபாபு!

Thursday, July 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நம்முடைய வாழ்த்துக்களையும் யோகி பாபு அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

அமீர் நடித்த ’யோகி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு. அதன்பின் பல திரைப்படங்களில் அவர் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தார் என்பதும் தற்போது அவர் முன்னணி காமெடி நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது

ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரே நேரத்தில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்த ’மண்டேலா’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு வருடமும் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து வரும் யோகிபாபு இந்த ஆண்டில் இதுவரை 7 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மேலும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவரை இன்றைய இனிய பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.