close
Choose your channels

அரவிந்தசாமி-த்ரிஷாவின் சதுரங்கவேட்டை-2 படத்தில் திடீர் மாற்றம்?

Saturday, November 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தனி ஒருவன்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன அரவிந்தசாமி சமீபத்தில் 'சதுரங்க வேட்டை 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு மனைவியாக 'தகராறு' பட நடிகை பூர்ணா நடிப்பதாகவும், த்ரிஷா இந்த படத்தின் கதையை நகர்த்தி செல்லும் மிக முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் வரை காத்திருப்போம்.
பிரபல இயக்குனர், காமெடி நடிகர் மனோபாலா தயாரித்து வரும் இந்த படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடிக்கின்றனர். 'சலீம்' இயக்குனர் நிர்மல்குமார் இயக்கும் இந்த படத்திற்கு அஸ்வின் வினாயகமூர்த்தி இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.