close
Choose your channels

'தல 59' இயக்குனர் எச்.வினோத்தின் முக்கிய அறிவிப்பு

Thursday, November 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'விஸ்வாசம்' படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவுள்ள 'தல 59' படத்தை 'சதுரங்க வேட்டை' இயக்குனர் எச்'வினோத் இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படம் குறித்த பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

குறிப்பாக இந்த படம் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படம் பிங்க் ரீமேக் அல்ல என்று நேற்று இயக்குனர் எச்.வினோத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் எச்.வினோத் இதுகுறித்து ஒரு விளக்கத்தை தற்போது அளித்துள்ளார். தான் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட எந்தவொரு சமூக வலைத்தளங்கலில் இல்லை என்றும் தன்னுடைய பெயரில் போலியான கணக்குகள் மூலம் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.