close
Choose your channels

மீண்டும் காமெடி கேரக்டரில் நடிக்க தயார்: சந்தானம் அறிவிப்பால் ஆச்சரியம் அடைந்த நடிகர்!

Saturday, August 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் ரஜினிகாந்த் அஜித் படங்களில் காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புகளை கூட அவர் மறுத்து விட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவருக்காக மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் ஆர்யா என்பதும் அவர் நடித்த ’கேப்டன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற போது அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சந்தானம் கலந்துகொண்டார். அதில் தனக்கும் ஆர்யாவுக்கும் உள்ள நட்பு குறித்து பேசிய சந்தானம், தாங்கள் இருவரும் சேர்ந்து நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் எம் ராஜேஷ், ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக இருந்தால் அந்த படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்க தயார் என்றும் சந்தானம் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ஆர்யாவுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.