close
Choose your channels

முக ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார்: பிரபல நடிகை அறிவிப்பு

Saturday, January 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட பல தலைவர்கள் தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட தயார் என சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட தயார் என்று அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே முக ஸ்டாலினுக்கு எதிராக போட்டுவிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ள நிலையில் தற்போது குஷ்புவும் முகஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் என்று கூறியிருப்பதால் இந்த முறை முக ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.